சென்னை

காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் ப சிதம்பரம் முத்தலாக் இஸ்லாமிய சட்டத்துகு விரோதமானது என உச்சநீதிமன்றம் அறிவித்ததை பாராட்டி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பில் முத்தலாக் முறை இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்றும், அதை தடை செய்ய மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது, முத்தலாக் என்றால் இஸ்லாமிய ஆண் ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் என கூறி விவாகரத்து செய்வது.  இது குறித்து முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான ப சிதம்பரம் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

”முத்தலாக் முறை சட்ட விரோதமானது என்னும் அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.  ஆனால் இஸ்லாமிய சட்டத்தில் வேறு இரண்டு முறையான விவாகரத்து முறைகள் உள்ளன.  அவையும் ஆண் பெண் சமம் என்பதற்கும் பெண்கள் உரிமைக்கும் எதிரானவையே” என சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்கு நேர்மாறான கருத்தை தெரிவிக்கிறது.  முத்தலாக் தடை சட்டம் அரசு இயற்றக் கூடாது என தனது எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி சொல்லி வருகிறது.  காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ரந்தீப் சுர்ஜிவாலா தாம் அது போல ஒரு டிவிட்டர் பதிவை பார்க்கவே இல்லை என கூறி விட்டார்.

சிதம்பரம் கூறியது போலவே வீரப்ப மொய்லியும் கட்சிக்கு இந்த முத்தலாக் விஷயத்தில் எதிரான கருத்தையே கூறுகிறார்.  விரைவில் மத்திய அரசு உச்ச நீதி மன்றம் கூறியபடி முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கூறி உள்ளார்