சென்னை,
சசிகலா என்ற பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் டி.டி.வி தினகரன் என்றும், அதிமுகவுக்கும் டிடிவி தினகரனுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவரை அதிமுகவுடன் இணைத்து பேசுவதே தவறு என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி அதிரடியாக கூறி உள்ளார்.
ஜெ.மறைவை தொடர்ந்து அதிமுக உடைந்ததன் காரணமாக கட்சியின் பெயர், சின்னம், கொடி அனைத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. பின்னர் ஓபிஎஸ், இபிஎஸ் அணியினர் இணைந்தது. பின்னர் இரு அணியினரும் சேர்ந்த பிரம்மான பத்திரங்கள் தாக்கல் செய்த காரணத்தின்ல், பல்வேறு கட்ட விசாரணைக்கு பிறகு இரட்டைலை சின்னம், கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நேற்று ஒதுக்கியது.
இதுகுறித்து டிடிவி தினகரன் தரப்பினர் தேர்தல்ஆணையம் மீதும், மத்திய பாஜக அரசு மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், டிடிவி தினகரனுக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமில்லை என்று ஆவேசமாக கூறினார்.
மேலுரும், “அ.தி.மு.க-வுடன் டி.டி.வி தினகரனை இணைத்துப் பேசுவதே தவறு. சசிகலா என்ற பணிப்பெண் மூலம் கட்சிக்குள் வந்தவர் டி.டி.வி.தினகரன்” என்றும் அதிரடியாக கூறினார்.