சென்னை

ன்று அறிவிக்கப்பட்ட புதிய கொரோனா கட்டுப்பாடுகளில் டாஸ்மாக் மூடாதது குறித்து அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாகப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   அதன்படி இரவு நேரத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.  திரையரங்குகள் மூடப்பட உள்ளன   மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட பல கடைகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல் பற்றிக் குறிப்பிடவில்லை.

அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன் இன்று தனது டிவிட்டர் பக்கத்தில்,

“தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிற முதல்வர் ஸ்டாலின், டாஸ்மாக் மதுக்கடைகளை மூடாமல் விட்டிருப்பது ஏன்?

நோய் பரப்பும் இடங்களாகச் செயல்படும் டாஸ்மாக் கடைகளையும், மதுபானக்கூடங்களையும் (Bar) மூடாமல் கொரோனாவைத் தடுக்கும் அரசின் நடவடிக்கைகள் முழுமை பெறாது.

தேவைப்பட்டால் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கடந்த ஆண்டுகளில் ஸ்டாலின் விடுத்த அறிக்கைகளை அவரே திரும்ப எடுத்துப் படித்துப் பார்த்துக் கொள்ளலாம்”

என பதிந்துள்ளார்.