டிடிவி தினகரன் தனிக்கட்சி? என்ன சொல்கிறார் தங்கதமிழ்ச்செல்வன்

சென்னை,

தினகரன் தனிக்கட்சி தொடங்குவதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று  தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டி உள்ளார்.

அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளரான டிடிவி தினகரன்,  எடப்பாடி ஓபிஎஸ் அணியினரை கட்சியில் இருநது அதிரடியாக நீக்கி, தனது ஆதரவாளர்களை நியமனம் செய்து வருகிறார்.

இதைத்தொடர்ந்து டிடிவிக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், குன்னம் தொகுதி எம்எல்ஏ ஆர்.டி.ராமச்சந்திரன்  செய்தியாளர்களிடம் கூறும் போது,   ஜெயலலிதா நியமித்த நிர்வாகிகள் யாரும் தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை என்பது அவர்களை தினகரன் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் தெரியவருகிறது.

எனவே, அவர் தனிக்கட்சி தொடங்குவதற்கான ஆயத்தப்பணிகளைத் தொடங்கிவிட்டார் என்றே நான் நினைக்கிறேன் என கூறினார்.

இது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவியின்  தீவிர ஆதரவாளரான தங்க தமிழ்செல்வன்,  தினகரன் தனிக்கட்சி தொடங்குவதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர். அப்படி ஒரு திட்டம் இல்லை என்று கூறினார்.

 
English Summary
TTV Dhinakaran will Start new party: What does Thangatamilselvan say about?