பலமில்லாத அணியை பலமாக்கவே தினகரன் கைது! திருநாவுக்கரசர்

Must read

சென்னை,

திமுகவின் பலமில்லாத அணியை பலமாக்கவே டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டி உள்ளார்.

இரட்டை இலை சின்னத்தை தங்களது அணிக்கு ஒதுக்க, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில் டிடிவி.தினகரன் நேற்று இரவு கைது செய்யப்பட்டார்.

தமிழக அரசியலில் இரு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தினகரன் கைது குறித்து செய்தியாளர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசிடம் கேள்வியெழுப்பினர்.

அவர் கூறியதாவது,  அதிமுக.,வில் பலமில்லாத ஒரு அணியை பலமாக்குவதற்காகவே இந்த கைது நடவடிக்கையை மத்திய பாரதியஜனதா அரசு எடுத்துள்ளது என்றும்,

தினகரன் கடுமையான குற்றமோ, தேச விரோத செயலிலோ ஈடுபடவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article