டில்லி,
அதிமுகவில் ஏற்பட்டுள்ள பரபரப்பான சூழலில் டிடிவி தினகரன் அணியினர் டில்லி தேர்தல் ஆணையத்தில் புதிய மனு ஒன்றை அளித்துள்ளனர். இதன் காரணமாக மீண்டும் பரபரப்பு நிலவி வருகிறது.
இதன் காரணமாக, டில்லியில் முகாமிட்டுள்ள ஒபிஎஸ் இபிஎஸ் அணியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டிடிவி தினகரன் அணியை சேர்ந்த புகழேந்தி, முன்னாள் எம்.பி. அன்பழகன் ஆகியோர் மனு கொடுத்துள்ளனர்.
அதில், அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம், பிரம்மான பத்திரம், இரட்டை இலை விவகாரத்தில் தங்களது கருத்தை கேட்காமல் எந்தவொரு முடிவும் எடுக்க கூடாது என்று கூறியுள்ளனர்.
நேற்று நடைபெற்ற ஓபிஎஸ் இபிஎஸ் அணியினிரின் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் எம்.பி.க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தினகரனுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதைத்தொடர்ந்து வரும் செப்டம்பர் 12ந்தேதி அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுகவின் இரு அணியினரையும் சேர்ந்தவர்கள் டில்லியில் முகாமிட்டு தாங்கள் ஏற்கனவே தாக்கல் செய்திருந்த பிம்மான பத்திரத்தை வாபஸ் பெற கடிதம் கொடுக்க ஆயத்தமாகி வருகின்றனர். இதன் காரணமாக கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும் தாங்கள் கைப்பற்ற தயாராகி வருகின்றனர். மனு கொடுக்க தேர்தல் ஆணை யத்தில் நேரம் கேட்டுள்ளனர். இதுவரை அவர்களுக்கு நேரம் ஒதுக்கவில்லை.
இதற்கிடையில், தினகரன் அணியினர் இன்று காலை 11 மணி அளவில் திடீரென தேர்தல் ஆணையம் சென்று மனு கொடுத்துள்ளனர். அவர்களை சந்திக்க தேர்தல்ஆணையம் நேரம் ஒதுக்கியது டில்லி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக ஓபிஎஸ்-இபிஎஸ் அணியினர் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.