டில்லி,

ரட்டை இலை வழக்கில், டில்லி போலீசார் முன் நாளையே ஆஜராக வேண்டும் என்று டில்லி போலீசார் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்று நாட்கள் அவகாசம் கேட்ட தினகரனின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

முடக்கப்பட்டுள்ள  இரட்டை இலை சின்னத்தை, தங்களது அணிக்கு ஒதுக்குவதற்காக, சுகேஷ் சந்தர் என்பவர் மூலம், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக கூறப்பட்டது.

டில்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திரா கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பான விசாணையில், தேர்தல் ஆணையத்துக்கு பணம் கொடுக்க  டிடிவி தினகரனிடம் இருந்து பணம் பெற்றதாக சுகேஷ் ஒப்புக்கொண்டார். இரட்டை இலைச்சின்னத்தை பெற  60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

புகாரின் அடிப்படையில், தினகரனுக்கு டில்லி போலீசார் சென்னை வந்து நேரில் சம்மன் கொடுத்தனர். அதில், விசாரணைக்கு சனிக்கிழமை டில்லி வந்து நேரில் ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், சொந்த பிரச்சினை காரணமாக, விசாரணைக்கு மூன்று நாட்கள் அவகாசம் கேட்டு டில்லி போலீசாரிடம் டிடிவி தினகரன்  கோரியிருந்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை டில்லி போலீசார் நிராகரித்து விட்டனர்.

இதன் காரணமாக டிடிவி வீட்டில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

தினகரன் நாளை டில்லி குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜராவாரா? அல்லது கோர்ட்டின் மூலம் டில்லி போலீசாரின் சம்மனுக்கு தடை பெறுவாரா? என்பது இன்று மாலை தெரியவரும்..