‘420’க்கு பொருத்தமானவர் தினகரனே! எடப்பாடி அதிரடி

டில்லி,

420க்கு பொருத்தமானவர் டிடிவி தினகரன்தான் என்று அதிரடியாக கூறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

துணைஜனாதிபதி பதவி ஏற்பு விழாவில கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள தமிழக முதல்வர் அங்கு பிரதமரை சந்தித்து நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து மீண்டும் வலியுறுத்தினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள், அவரிடம்  டிடிவி தினகரன், எடப்பாடி ஒரு 420 என்று கூறியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  420 என்பது டிடிவி தினகரனுக்கு தான் பொருத்தமாக இருக்கும் என்றார்.

மேலும் கடந்த 3 மாதங்களாக டிடிவி தினகரன் செய்து வரும் வேலைகள் அதன் காரணமாக அவர் சந்தித்து வரும் பிரச்சினைகளை பார்த்தால் உங்களுக்கே தெரியும் என்று அதிரடியாக கூறினார்.

அதிமுக அம்மா அணியில் ஏற்பட்டுள்ள உச்சக்கட்ட பிரச்சினையை தொடர்ந்து, நேற்று நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத்தொடர்ந்து  டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசும்போது,

தற்போது ஆட்சிப்பொறுப்பில் இருப்பவர்கள் இருக்கும் வரை இருநதுகொண்டு, கிடைத்ததை சுட்டுபவர்கள்தான் என்று குற்றம் சாட்டிய டிடிவி,

தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்ட  பிரமாணப் பத்திரத்தில், துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் என்று குறிப்பிட்டதிற்கு முரணாக, தற்போது பேசுபவர்கள் 420 என்று அதிரடியாக குற்றம் சாட்டினார்.

எடப்படி அணியினர்  மடியில் கனம் இருப்பதால் தற்போது அச்சப்படுகின்றனர். யாரோ ஒரு சிலருக்காக எனது பயணம் நிற்காது. நேற்று முளைத்த காளான்களக்கு எல்லாம் நான் பதில் சொல்ல தேவையில்லை என்றும் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் கூறினார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி, 420க்கு பொருத்தமானவர் டிடிவி தினகரன்தான் என்று அதிரடியாக கூறினார்.

இதன் காரணாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் மீண்டும் வலுவடைந்து உள்ளது.
English Summary
TTV.Dhinakaran is Suitable for '420', The Tamilnadu CM Edapadi Palanisamy replied