சென்னை,

திமுகவில் இணைவது குறித்து டிடிவியிடம் இருந்து தனக்கு அழைப்பு ஏதும் வரவில்லை என்று முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

வரும் 5ந்தேதி கட்சி அலுவலகத்துக்கு வருவதாகவும், இரு அணிகளும் இணைய முயற்சி செய்வதாகவும்  டிடிவி தினகரன் அறிவித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனக்க அழைப்பு ஏதும் வரவில்லை என்று கூறி இருக்கிறார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு அணிகள் இணைப்பு விவகாரத்தில் எங்கள் முடிவை ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்றார்.

மேலும், டிடிவியிடம் இருந்து அழைப்பு வந்ததா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு,  இதுவரை டிடிவி தினகரனிடம் இருந்து தனக்கு அழைப்பு எதுவும் வரவில்லை என்ற ஓபிஎஸ்,

அதிமுக அணிகள் இணைப்பு தொடர்பாக அமைச்சர்களிடம் இருந்து தனக்கு நேரடியாக அழைப்பு வரவில்லை என்றும்,  அமைச்சர்கள் மட்டுமே இணைப்பு குறித்து பேசி வருவதாகவும் எடப்பாடி அணியிலிருந்து தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.

அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடத்த வுள்ள அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, தனக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும்,

தமிழக அரசின் செயல்பாடுகள் பற்றி கேட்டதற்கு, அதிமுக அரசு ஊழல் அரசாக திகழ்கிறது,  ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் கூறினார்.

இதனிடையே இரு அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என ஓபிஎஸ் அணி எம்பி மைத்ரேயன் மீண்டும் தெரிவித்துள்ளார்.