சிறையில் சசியுடன் சந்திப்பு: எடப்பாடிக்கு மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்!

மதுரை,

கசிய காப்பு பிரமாணத்திற்கு எதிராக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட  5 அமைச்சர்கள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு சசிகலாவை அமைச்சர்கள் சிலர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சந்தித்து வந்தனர்.

அமைச்சர்கள், குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட சசிகலாவை சந்தித்தது, அவர்கள் அமைச்சர்களாக பதவி ஏற்கும்போது, எடுக்கும் ரகசிய காப்பு பிரமாணத்துக்கு எதிரானது என, மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆணழகன் என்பவர் இந்த  வழக்கை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, அப்போது மதுரை ஐகோர்ட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட 5 அமைச்சர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
English Summary
Tamilnadu Ministers met Sasi in prison: Madurai High Court notice to Edappadi and 5 ministers