கர்நாடகா எப்போதுமே உண்மையைச் சொல்வதில்லை! கோவா முதல்வரும் குற்றச்சாட்டு!

பனாஜி:

தி நீர் பிரச்சினை காரணமாக கர்நாடகாவுக்கும், கோவாக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. மகதாயீ நதிநீர் பிரச்சினை  குறித்து சட்டமன்றத்தில் பதில் அளித்த கோவா முதல்வர் மனோகர் பரிக்கரும்,

நதிநீர் பிரச்னைகளில் கர்நாடகா எப்போதுமே உண்மையைச் சொல்வதில்லை என்று பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

அணைகள் என்ற பெயரில் சுற்றுச்சூலை பாதிக்கும் வெடிகுண்டுகளை கர்நாடகா புதைப்பதாக கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கடுமையான குற்றச்சாட்டுக்களை கூறி உள்ளார்.

தமிழகம் கர்நாடகம் இடையே காவிரி பிரச்சினை இருப்பதுபோல,  கர்நாடகா – மகாராஷ்டிரா மாநிலங்களுடன் கோவாவுக்கும் நதிநீர் பிரச்சினை உள்ளது.

இதுகுறித்து கோவா சட்டசபையில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய கோவா முதல்வர் மனோகர் பரிக்கர்,

கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவாவில் மஹாதேயி நதி ஓடுகிறது. இந்த நதி நீர் கடைசியாக பனாஜி அருகே அரபிக் கடலில் கலக்கிறது.  மஹாதேயி ஆற்றின் 78 சதவீத படுகைள் கோவாவில் அமைந்துள்ளன.

ஆனால் கர்நாடகாவும், மகாராஷ்டிராவும் மகதாயி ஆற்றின் போக்கை திசை திருப்பும் வகையில் அணைகளை கட்டி வருகின்றன. இதனால் ஆற்று நீர் மாசடைவதோடு சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது.

நதிநீர் பிரச்னைக்கு கட்சி ரீதியாக தீர்வு காண முடியாது. இது மாநிலங்களின் நலன் சம்பந்தப் பட்டது என்பதால் அனைத்து கட்சிகளும் ஒன்றாக செயல்பட்டு ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.

கர்நாடகாவை பொறுத்தவரை பல மாநிலங்களுடன் அதற்கு நதிநீர் பங்கீடு பிரச்னை உள்ளது. கர்நாடகா அணைகள் என்ற பெயரில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வெடிகுண்டுகளை புதைத்து வருகிறது.

நதிநீர் பிரச்னைகளில் கர்நாடகா எப்போதுமே உண்மையைச் சொல்வதில்லை.

நதிநீரை சிறப்பாக பங்கிட்டு கொள்வது குறித்து கர்நாடகாவிற்கு சிறிதும் தெரியவில்லை, அதுபற்றி அந்த மாநிலம் கவலைப்படுவதாகவும் தெரியவில்லை.

மகதாயி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை தீர்ப்பாயத்திடம் எடுத்துச் சென்றிருக்கிறோம்.  கோவா மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை தீர்க்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கோவா முதல்வர் பேசினார்.
English Summary
Karnataka never tell the truth in River water distribution! Goa CM Manokar Parikar allegation