மேலும் அவகாசம்: தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி டிடிவி தரப்பு வழக்கு!

சென்னை,

ரட்டை இலை தொடர்பான விசாரணையில் தங்களது தரப்பு ஆவனம் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு  உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் டிடிவி தரப்பு சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரட்டை இலை முடக்கம் தொடர்பாக வரும் அக்டோபர் 6ந்தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அப்போது அதிமுக அணிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவிக்கவும் அறுவுறுத்தி இருந்தது.

இதையடுத்து, மேலும் அவகாசம் கேட்டு டிடிவி தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்திருந்தனர். அந்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்து உள்ளது.

இரட்டை இலை சின்னம் சர்ச்சை தொடர்பாக புதிதாக ஆவணங்கள் தாக்கல் செய்ய விரும்பி னால் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தகுந்த ஆதாரங்களுடன் தாக்கல் செய்யலாம். அதன் நகலை எதிர் தரப்புக்கும் அளிக்க வேண்டும். இந்த ஆவணங்களில் கட்சியின்,எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்திட வேண்டும். மேலும், 2016 டிச.5-ம் தேதியன்று கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியலை அவர்களது ஒப்புதலுடன் பெற்றிருக்க வேண்டும்.

இந்த ஆவணங்கள் அனைத்தையும் செப்டம்பர்.29-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில் அக்டோபர். 6-ம் தேதி மாலை 3 மணிக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணை நடக்கும். அப்போது, நேரிலோ அல்லது அத்தாட்சி பெற்ற வழக்குரைஞர்களோ பங்கேற்கலாம் என்று குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் தங்களது அவகாசம் அளிக்க வில்லை என்றும், மேலும் அவகாசம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று டிடிவி சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்க தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
ttv dhinakaran case file to madurai high court, ot demand More time from EC