மதக் கலவரம் தூண்ட முயற்சி!! ஹெச்.ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை:

இருவேறு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் அறிக்கை வெளியிட்ட பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அவ்வப்போது பிற மத்தவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி வருபவர் ஹெச்.ராஜா. இவர் ராமநாதபுரம் அஸ்வின்குமார் வீட்டில் நடைபெற்ற தாக்குதல் குறித்து வெளியிட்ட ஒரு அறிக்கையில் இரு மதத்தினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்திருப்பதாக இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரகீம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம் ஹெச். ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. திருவல்லிக்கேணி போலீசார் வழக்கை விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
English Summary
try to makr religion riot highcourt order to register case against h raja