திருநங்கை விளையாட்டு வீரர்கள் மகளிர் மற்றும் சிறுமிகளுக்கான விளையாட்டுகளில் பங்கேற்பதைத் தடைசெய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார்.

“பெண்கள் விளையாட்டுகளில் ஆண்களை விலக்கி வைத்தல்” என்று தலைப்பிடப்பட்ட இந்த உத்தரவு, கூட்டாட்சி நிதியைப் பெறும் நிறுவனங்கள், டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைக்கு ஏற்ப ‘டைட்டில் IX’ ஐப் பின்பற்றுவதை உறுதிசெய்துள்ளது.

மேலும் இந்த உத்தரவு “பாலினம்” என்பது ஒருவர் பிறக்கும்போதே வழங்கப்பட்ட பாலினமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

“இந்த நிர்வாக உத்தரவின் மூலம், பெண்கள் விளையாட்டு மீதான போர் முடிந்துவிட்டது” என்று இதனை கையெழுத்திட்ட பின் டிரம்ப் கூறினார்.

இந்த நிகழ்வின் போது முன்னாள் கல்லூரி நீச்சல் வீரர் ரிலே கெய்ன்ஸ் உட்பட தடையை ஆதரித்த சட்டமியற்றுபவர்கள் மற்றும் பெண் விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், இந்த உத்தரவு மகளிருக்கான விளையாட்டுகள் மற்றும் மகளிருக்கான லாக்கர் அறைகளை பெண்களுக்கு மட்டும் வழங்க மறுக்கும் “பள்ளிகள் மற்றும் தடகள சங்கங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை, அமலாக்க நடவடிக்கைகள் உட்பட” தேவைப்படும் அனைத்து வாக்குறுதிகளையும் “டைட்டில் IX” நிலைநிறுத்தருவதாகக் கூறினார்.