வாஷிங்டன்

ட்டவிரோதமாககுடியேறுவோர் எல்லைக்குள் நுழையும் போது அவர்களைக் காலில் சுட அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டதாக  தி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவில் சட்ட விரோதமாகக் குடியேறுவோர் எண்ணிக்கை அதிகம் ஆகி வருகிறது.  அதைத் தடுக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் பல முயற்சிகளை எடுத்து வருகிறார்.   அவற்றுக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது.    சட்டவிரோதமாக குடியேறும் குடும்பங்களைப் பிரித்து தனித்தனி முகாம்களில் அடைக்க அவர் உத்தரவிட்டதற்கு மற்றும் மெக்சிகோ எல்லையில் மிக உயரத் தடுப்புச் சுவர் அமைக்க முற்பட்டதற்கு எல்லாமே எதிர்ப்பு எழுந்தது.

இந்நிலையில் அதிபரின் வெள்ளை மாளிகையில் இந்த சட்டவிரோத குடியேறுவது  தடுப்பு குறித்துப் பல முறை அதிகாரிகளுடன் அதிபர் டிரம்ப் சந்திப்பு நிகழ்த்தி உள்ளார்.   அந்த சந்திப்புக்கள் குறித்த விவரங்களை அமெரிக்கச் செய்தி ஊடகமான தி நியூயார்க் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த சந்திப்பில் அப்போதைய உள்நாட்டு பாதுகாப்பு செயலர் கிரிஸ்டொஜென் நெல்சன், மாநிலச் செயலர் மைக் பாம்பியோ, எல்லை பாதுகாப்பு தலைவர்  கெவின்,  மிக் முலவனேய் மற்றும் பலர் கலந்துக் கொண்டுள்ளனர்.   அப்போது டிரம்ப் அதிகாரிகளிடம், “நீங்கள் என்னை முட்டாளாகக் காட்ட முயல்கின்றீர்கள்,  எனக்கு இந்த விவகாரத்தை எப்படிக் கையாள்வது என்பது தெரியும்.

நாட்டின் தெற்குப் பகுதியில் இத்தகைய ஊடுருவல் மற்றும் நாட்டைக் கைப்பற்றும் முயற்சி நடந்து வருகிறது.   அதிகாரிகளாகிய நீங்கள் அனைவரும் உங்கள் மெக்சிகோ நண்பர்களைக் காக்க முயல்கின்றீர்கள்.  நான் அதை அனுமதிக்க மாட்டேன்.   இனி எல்லை  வழியாக ஊருபவர்களைக் காலில் சுட உத்தரவிட்டுள்ளேன்” எனத் தெரிவித்தார்.

இதையொட்டி அந்தக் கூட்டத்தில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் டிரம்ப் அந்த உத்தரவை நீக்கியதாகவும் அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.