மாஸ்கோ: ஏகே-47 என்ற உலகப்புகழ் பெற்ற ஆயுதத்தைக் கண்டுபிடித்த மிக்கெய்ல் கலாஷ்னிகோவ் நூறாவது பிறந்தநாள் ரஷ்யாவில் விமர்சையாகக் கொண்டாடப்படவுள்ளது.

அந்தக் கொண்டாட்டத்தில் இளம் வயதினர் அதிகமாக கலந்துகொள்கிறார்கள். அடுத்தமாதம் பலவிதமான நிகழ்ச்சிகள் மற்றும் அருங்காட்சியக கண்காட்சி மற்றும் பயோபிக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் வாயிலாக அவரின் நூறாவது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

காலஷ்னிகோவ் ரஷ்யாவில் ஒரு நாயகனாகவும், ராணுவப் பெருமையின் அடையாளமாகவும் கொண்டாடப்படுகிறார். அவர் கண்டுபிடித்த ஏகே-47 என்ற ஆயுதம், நாடுகளின் ராணுவமானாலும் சரி, கெரில்லா படைகளானாலும் சரி, அனைவராலுமே விரும்பப்படும் ஒன்றாகும்.

இதுவொரு இயந்திர துப்பாக்கி வகையைச் சேர்ந்தது. முந்தைய ஆண்டுகளின் ரஷ்ய ராணுவக் கல்வியில் இந்த ஆயுதம் குறித்தப் பாடம் பிரதமானமானது.

இவர் கடந்த 2013ம் ஆண்டு தனது 94வது வயதில் மரணமடைந்தார் என்பது நினைவில் கொள்ளத்தக்கது.