வாஷிங்டன்

ஜோ பைடன் அமெரிக்காவை 3 ஆம் உலகப்போரை நோக்கி அழைத்துச் செல்வதாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு வழக்கில் சிறை சென்று சில மணி நேரங்களில் பிணையில் வெளி வந்தார்.  அமெரிக்காவில் 2024-இல் மீண்டும் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.

அந்த தேர்தலில் தற்போதைய அதிபரான ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனும், அவருக்குப் போட்டியாகக் களமிறங்க துடிக்கும் டொனால்ட் டிரம்பும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

டிரம்ப் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ஜோ பைடனை கடுமையான விமர்சித்துள்ளார்.

அந்த வீடியோவில்,

“ஜோ பைடன் நேர்மையற்றவர். அவர் முட்டாள் மட்டுமல்ல, திறமை இல்லாதவரும் கூட.அவருக்கு  நாட்டின் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் எல்லைகளைத் திறந்துவிட்டதன் மூலம், அப்பட்டமான வெறி பிடித்துப் போய் மூளை கலங்கிவிட்டது  ஜோ பைடனுக்கு மனப்பிறழ்வு நமது நாட்டை சீரழித்து 3-ம் உலகப்போரை நோக்கி இட்டுச் செல்லும்”

என்று டிரம்ப் கூறியுள்ளார்.