வாஷிங்டன்,
மெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியவர்களின் வேலைக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் காரணமாக  அங்கு பணிபுரியும் இந்தியர்களுக்கு வேலையிழப்பு ஏற்படும் என்ற அச்சம் தலைதூக்கி உள்ளத.
அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் டொனால்ட் டிரம்ப், தேர்தல் பிரச்சாரத்தின்போது, அமெ ரிக்காவில் சட்டவிரோதமாக பணியில் இருப்பவர்கள், குடியேறி இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்று கூறினார்.
trump
அதேபோல், அதிபராக தேர்வு செய்யப்பட்ட பின்னர், அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி இருக்கும் சுமார் 30 லட்சம் பேர் வெளியேற்றப்படுவார்கள் அல்லது கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்து இருந்தார்.
அமெரிக்காவில் ஐ.டி கம்பெனிகள் நடத்தி வரும் டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ, போன்ற நிறுவனங்கள், இந்தியாவில் இருந்து ஆட்களை தேர்வு செய்து பணியாற்றி வந்தது.
ஆனால்,  டொனால்டு டிரம்பின் அமெரிக்க அதிபராக பதவி ஏற்றபிறகு, ஹெச் 1பி விசா வழங்குவதில் கட்டுப்பாடு களை கொண்டு வரலாம் என கூறப்படுகிறது.
infosys
இதன் காரணமாக இந்திய ஐடி நிறுனங்கள், இந்திய மாணவர்க ளுக்கு பதிலாக அமெரிக்க கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களை வேலைக்கு அழைக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்காவில், புதிய ஹெச் 1பி விசா பெற்று, 86,000 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆனால் வரும் காலங்களில் அவர்களுக்கு பணி உத்தரவாதம் இல்லை என்றே கூறப்படுகிறது.
இதுகுறித்து இன்போசிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராவ் என்பவர் கூறுகையில், தற்போது, ”ஒவ்வொரு காலாண்டுக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருந்து இன்போசிஸ் 500-700 பேரை பணிக்கு அமர்த்தி வருகிறது. இவர்களில் 80 சதவீதம் பேர் அமெரிக்கர்கள்தான்” என்றார்.
அதுபோல, அமெரிக்காவில் பணியாற்றி வருபவர்களுக்கு சம்பள வரையறையை டொனால்ட் டிரம்ப் நிர்ணயிப்பார் என்ற பரவலான கருத்து எழுந்துள்ளது. அப்படி வரையறுக்கப்படும் பட்சத்தில் இந்திய நிறுவனங்களும் அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அந்த சம்பளத்தை வழங்க வேண்டியது இருக்கும்.
இதுபோன்ற இடற்பாடுகளை தவிர்க்க இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை குறைத்து வருகிறது இந்திய ஐடி நிறுவனங்கள்.