வாஷிங்டன்,

யங்கரவாதிகளை விசாரிக்க சித்ரவதை முறைகளை மீண்டும் கொண்டுவர பரிசீலனை செய்வதாக அமெரிக்க புதிய அதிபர் டிரம்ப் அதிரடியாக கூறி உள்ளார்.

“முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும், பயங்கரவாதிகளை விசாரிக்க, சித்ரவதை முறையை கொண்டு வர தீவிரமாக பரிசீலிக்கிறேன்” என்று டிரம்ப் பரபரப்பு பேட்டி அளித்தார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் தேர்வு செய்யப்பட்டதும் பல அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.

அதையடுத்து, தற்போது பயங்கரவாதிகளை விசாரிக்க புஷ் அதிபராக இருந்தபோது அறிமுகப் படுத்தப்பட்ட சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வர இருப்பதாக கூறி உள்ளார்.

அமெரிக்க ராணுவ தலைமையமான பென்டகன் மீது, 2001-ம் ஆண்டு செப்டம்பர் 11-ந் தேதி அல்கொய்தா இயக்கத்தினர்  தாக்கினர். மேலும்  உலக வர்த்தக மையத்தின் மீதும் விமானங்களை மோதி தாக்குதல் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கும்,  பயங்கரவாதிகளை விசாரணை செய்வ தற்கும் கொடுமையான சித்ரவதை முறையை அப்போதைய ஜனாதிபதி  ஜார்ஜ் டபிள்யூ,புஷ் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

ஆனால், அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்ற பிறகு, சித்ரவதை மூலம் கைதிகளை விசாரிக்க தடை விதித்தார். மேலும் ‘வாட்டர்போர்டிங்’  எனப்படும் சித்ரவதை முறையை அறவே ஒழித்தார்.

ஆனால், டிரம்ப் அதிபராக பதவி ஏற்றதும், தற்போதைய அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் பாம்பியா,  ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறையை கொண்டு வருவது குறித்து பரிசீலிப்பேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஏ.பி.சி. நியூஸ் டி.வி.க்கு டிரப்ம் அளித்த சிறப்பு பேட்டியில், சித்ரவதை முறை கெண்டு வருவது பற்றி பரிசிலித்து வருகிறேன் என்று கூறி உள்ளார்.

மேலும், யாரும் எதிர்பாராத வகையில் அளவில் ஐ.எஸ். இயக்கத்தினர் செயல்பட்டு வருகின்றனர். அவரை ஒடுக்க   நானும் ‘வாட்டர்போர்டிங்’ சித்ரவதை முறையை மீண்டும் கொண்டு வருவது குறித்து மிக தீவிரமாக பரிசீலித்துக்கொண்டிருக்கிறேன்.

என்னைப் பொறுத்தமட்டில் முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். அப்பாவி மக்களை ஐ.எஸ். இயக்கத்தினர் தலையை துண்டித்து படுகொலை செய்கிறார்கள். அதை வீடியோவில் பதிவு செய்து ஆன்லைனில் வெளியிடுகிறார்கள் என்றார்.

இவர்களை கட்டுப்படுத்த  நாம் சட்டப்படி என்ன செய்ய முடியுமோ, அதையாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சித்ரவதை பலன் அளிக்கும் பலன் அளிக்கும் என்றுதான் நான் நிச்சயமாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சி.ஐ.ஏ.வின் சித்திரவதை முறைகள்

 

பயங்கரவாதி என அமெரிக்க உளவுத்துறை ஒருவரை முடிவு செய்துவிட்டால் அவரிடமிருந்து தகவல்களைப் பெற கையாளும் முறையகள் கொடூரமானவை.

சுவரில் அறைதல், பெட்டிக்குள் கை-கால்களை மடக்கியபடி உட்காரவைத்தல், தொடர்ந்து 180 மணி நேரத்துக்குத் தூங்க விடாமல் தடுத்துக்கொண்டே இருத்தல், ஆடையே இல்லாமல் – மிகவும் அசௌகரியமான வகைகளில் உட்காரவும் நிற்கவும் வைத்தல், முகத்தைத் துணியால் மூடி, ஈரத் துணியால் முகத்தை அழுத்தி மூச்சுவிட முடியாமல் திணறவைத்து, தண்ணீரில் மூழ்கும்போது தத்தளிப்பவரின் நிலைக்குக் கொண்டு சென்று, மூச்சு அடங்கப்போகும் கடைசி நொடியில் மீண்டும் சுவாசிக்க விடுதல் (வாட்டர் போர்டிங்) என்ற சித்ரவதைகளுக்கு குறிப்பிட்ட நபர் ஆட்படுத்தப்படுவார்.

‘வாட்டர்போர்டிங்’  சித்ரவதை முறை என்பது,  தலையை  சாய்தளத்தில் கீழ்நோக்கி தொங்குமாறு வைக்கப்பட்டு பின்புறம் அசைய முடியாமல் பிணைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் முகத்தில் மூச்சு காற்று செல்லும் வழியில் தண்ணீரை ஊற்றுவார்கள். இதனால் தண்ணீரில் மூழ்கடிப்பது போன்ற உணர்வு ஏற்படும். ஒரு கட்டத்தில்  இதன் காரணமாக  நுரையீரல் சேதம், மூளைச்சேதமும் ஏற்படும். இதன் காரணமாக  மரணமும் நேரிட வாய்ப்பு உண்டு என்று கூறப்படுகிறது.

இந்த வாட்டர் போர்டிங் முறையால் வலிப்பும் வாந்தியும்கூட வந்துகொண்டே இருக்கும்.

இந்த வாட்டர் போர்டிங் என்ற சித்ரவதையை தொடர்ந்து ஒருவருக்கு செய்யும்போது, அவர் உடலெல்லாம் விறைத்து மரக்கட்டையாகி வாயிலிருந்து நுரை வருமளவுக்கு ஆகிவிடுவார்.

இங்கே பட்டியலிட்டதைவிட மோசமான வழிகளிலும் சி.ஐ.ஏ. சித்திரவைதைகள் நடப்பது உண்டு.

இதுபோன்ற சித்திரவதை முறைகளுக்குத்தான் முந்தைய அதிபர் ஒபாமா தடை விதித்தார். இப்போது டிரம்ப், மீண்டும் அனுமதி அளித்திருக்கிறார்.