சினிமாவுக்கு நிகராக வரவேற்பை பெற்று வரும் வெப் தொடர்களிலும் முன்னணி நடிகர்கள் நடித்து வருகின்றனர். அந்த வகையில் த்ரிஷாவும் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க முடிவு செய்துள்ளார்.இந்த வெப் சீரிஸின் பெயர் ‘ப்ரிந்தா’.
இந்த சீரிஸில் நடிக்க த்ரிஷாவிற்கு அதிக சம்பளம் பேசப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் சீரிஸின் உரிமையை சோனி லைவ் பெற்றிருப்பது குற்றிப்பிடத்தக்கது.இந்த வெப் தொடர் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு மற்ற மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது.
இந்த வெப் சீரிஸ் நேற்று பூஜையுடன் துவங்கியதை உறுதிப்படுத்தும் வகையில் ப்ரிந்தா என்ற ஹேஷ்டாக்குடன் நடிகை த்ரிஷா போஸ்ட் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இந்த சீரிஸ் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.