மெட்டி ஒலி சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி.

உமாவின் உடன் பிறந்த சகோதரி வனஜாவும், ‘மெட்டி ஒலி’ சீரியலில் நடித்திருந்தார். கால்நடை மருத்துவரை திருமணம் செய்துக் கொண்ட உமா அதன் பின்னர் சீரியல்களில் நடிக்காமல் இருந்தார்.

‘ஶ்ரீ சாய் பொட்டிக்’ எனும் பொட்டிக்கை ஆரம்பித்தார். கடந்த 5,6 வருடங்களாக வீட்டிலிருந்தே அந்த பிஸினெஸை பார்த்துக் கொண்டார். இதற்கிடையே கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சையிலும் இருந்திருக்கிறார் உமா.

இன்று காலை வாந்தி, மயக்கம் ஏற்பட்டு அவர் உயிரிழந்தது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.