சிங்கத்திற்கு சீதா – அக்பர் என்று பெயரிடப்பட்ட விவகாரத்தில் திரிபுரா மாநில தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திரிபுரா மாநிலத்தில் இருந்து பிப்ரவரி 12ம் தேதி மேற்கு வங்க மாநிலம் சிலிகுரி உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இரண்டு சிங்கங்களுக்கு சீதா – அக்பர் என்று பெயரிடப்பட்ட விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது.
சிங்கங்களுக்கு பெயர் வைத்த விவகாரத்தில் மேற்கு வங்க அதிகாரிகளை வி.ஹெச்.பி. அமைப்பு குறைகூறிய நிலையில் கடவுள் பெயரை எந்த ஒரு விலங்குக்கும் வைக்கக்கூடாது என்று கொல்கத்தா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் திரிபுராவில் இருந்து சிலிகுரிக்கு அனுப்பிவைத்த போது பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த திரிபுரா அரசு சிங்கங்களுக்கு பெயர் வைத்த விவகாரம் தொடர்பாக அம்மாநில முதன்மை தலைமை வனப்பாதுகாப்பு அதிகாரி பிரபின் லால் அகர்வாலை பணியிடை நீக்கம் செய்துள்ளது.