பிரபல இந்தி பின்னணி பாடகரும் புகழ்பெற்ற கஜல் பாடகருமான பங்கஜ் உதாஸ் காலமானார், அவருக்கு வயது 73.

பங்கஜ் உதாஸ் மறைவு செய்தி குறித்து அவரது மகள் அறிவித்துள்ளார்.

இந்தி திரைப்படங்களில் பலநூறு பாடல்களை பாடியுள்ள பங்கஜ் உதாஸ் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவந்த நிலையில் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார்.

சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் மரணடைந்தார். அவரது மறைவு செய்தி மும்பை திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

இந்திய அரசின் பதம்ஸ்ரீ பெற்ற பங்கஜ் உதாஸ் இந்தி திரைப்படங்கள் தவிர பல்வேறு கஜல் ஆல்பங்களும் வெளியிட்டுள்ளார்.