அகர்தலா: திரிபுராவில் நாளை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அங்கு வாக்குப்பதிவு இயந்திரகள் அனுப்பும்பணி நடைபெற்று வருகிறது. தேர்தலையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

60தொகுதிகளைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி (நாளை) 16-ம் தேதி) தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு காலை 7மணிக்கு தொடங்கி மாலை 4மணிக்கு முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2-ம் தேதி நடைபெறுகிறது.

நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, மாநிலம் முழுவதும் 3,328 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளதுடன், பதற்றமான , 1,100 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

திரிபுரா சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் ஓய்ந்தது. மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும் 20 பெண்கள் உள்பட மொத்தம் 259 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.  இந்த தேர்தலில், 28.13 லட்சம் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனர்.

 நாளை தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவி பேட் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டு தயாராக வைக்கப்படுகின்றன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தேர்தலுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தோ்தலில் பதிவாகும் வாக்குகள், மாா்ச் 2-இல் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.