திருச்சி சாருபாலா தொண்டமான்-91,308 பேர் அதிமுகவில் இணைந்தனர்!

Must read

 
1sarubalaசென்னை:
மாற்று கட்சியினரை சேர்ந்த 91,308 பேர் அதிகமுகவில் இணைவும் விழா இன்று காலை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றது.
புதிதாக இணைந்தவர்களை வரவேற்று அதிமுக பொதுசசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பேசியதாவது:
“தமிழகத்தில் அம்மா உணவகத்தைப் போல மற்ற மாநிலங்களிலும் தொடங்க முன்வந்துள்ளனர். வெளிநாட்டவரும் அம்மா உணவகங்களைப் பார்வையிட்டு தங்கள் நாட்டிலும் தொடங்க உள்ளனர்.
புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக வெற்றி பெற பாடுபட வேண்டும். மக்களுக்காகவே வாழும் நான் மேலும் ஏராளமான மக்கள் நலப்பணிகளை நிறைவேற்ற உள்ளேன். அதிமுகவுக்கு நிகரான இயக்கம் வேறு எதுவும் இல்லை, வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும்” என்றார். உங்கள் அனைவருக்கும் அதிமுக அரசியல் பயிற்சி களமாக அமையும் என ஜெயலலிதா பேசினார்.
பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 91,308 பேர், அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது. அனைவருக்கும்  புதிய உறுப்பினர் அட்டையை ஜெயலலிதா வழங்கினார்.
அதிமுகவில் இணைந்த முக்கிய பிரமுகர்கள்
திருச்சி முன்னாள் மேயரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான  சாருபாலா
பிரபல நடிகர் கஞ்சா கருப்பு
திமுக முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆரின் மகன் ரமேஷ்,
தமாகாவின் தொட்டியம் ராஜசேகரன்,
அறந்தாங்கி நகர்மன்ற தலைவர் மீனா (திமுக) 
நடிகை  பசி சத்யாவும் 
மதிமுக பூவை.கந்தன்
அதிமுகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சாருபாலா தொண்டமான், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்காக பாடுபடுவோம். பெண்களின் பணி மகத்தானது, அதன் அடிப்படையில் அதிமுகவில் இணைந்துள்ளேன்” என்றார்.

More articles

Latest article