மே தின பூங்காவில் முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை

Must read

சென்னை:
சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், சிகாகோ நகரில் தொழிலாளர்கள் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரமாண்டமான பேரணியை நடத்தி – தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்து பெற்ற உன்னதமான உரிமைகளை நினைவுகூரும் மே 1-ஆம் நாளை முன்னிட்டு தொழிலாளர்கள் அனைவருக்கும் எனது மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள மே தின பூங்காவில், மே தின நினைவு சின்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.  இந்த விழாவில் பேசிய அவர், தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாமல், அவர்களை வாழ வைக்ககூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது என்றார்.

More articles

Latest article