அனிதாவுக்கு தினகரன் அஞ்சலி: திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

Must read

 

நீட் குழப்படிகளால் மனம் வெறுத்து தற்கொலை செய்துகொண்ட அனிதாவின் வீட்டுக்கு நாளை சென்று ஆறுதல் தெரிவிக்கப்போவதாக அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தரப்பு தெரிவித்துள்ளது. இதற்கிடையே நேற்று தனது டிவிட்டர் பக்கத்தில் அனிதாவுக்கு அஞ்சலி தெரிவித்திருந்தார் டிடிவி தினகரன்.

“நீட் தேர்வை எதிர்த்து போராடியஅன்பு மகள் அனிதா தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த மனவேதனையும் அதிர்ச்சியும் அளிக்கிறது.” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பின்னூட்டம் இட்ட பலரும் தினகரனை திட்டித் தீர்த்திருந்தார்கள். அவற்றில் சில…

அனிதா

நீங்க எல்லாம் கொஞ்சம் அதிகார போதை சண்டைய விட்டுட்டு இனியாவது ஓட்டுபோட்ட மக்களோட பிரச்சினைகளை பாருங்க சார்

P.Raja Manickam

இது இரங்கல் செய்தி .இங்கே இரங்கல் செய்தியை மட்டும் பதிவிடுங்கள் .

niranjan kumar

உங்களுக்கு எல்லாம் கட்சி வேலைய கவனிக்கவே நேரம் சரியா இருக்குமே… இப்போ என்ன வருத்தம் எல்லாம் தெரிவிக்கிறீங்க…

@skraj_music

அனுதாபம் சொல்லி பயனில்லை. தைரியமா மோடியை எதிர்த்து நில்லுங்க. மோடியை யார் எதிர்த்தாலும் கூட நாங்க இருப்போம்.

T S Manikandan‏   las

கையாலாகாத அரசால் போன உயிர். உன்னை போல பணத்தை திங்கும் பேய்களின் ஆறுதல் அந்த ஆன்மாவை சாந்தி படுத்தாது

More articles

Latest article