சென்னை: முதுநிலை ஆசிரியர் பணிக்கான டெட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தேர்வு எழுதியவர்கள் இணையதளத்தில் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வுக்கான முடிவுகளை இன்று வெளியிட்டது. தங்கள் தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம்.=
முதுநிலை பட்டதாரி ஆசிரியர், கணினி பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பாக தேர்வுகள் நடத்தப்பட்டது. 2200-க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.
இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதிலிருந்து 2,13,893 பேர் எழுதியிருந்தனர். இதற்சகான தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. தேர்வு முடிவுகளை trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் இதனை அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.