சென்னை

டிக்கடி மின்சார ரயில்கள் தாமதமாவதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர்.

மின்சார ரயில்கள் சென்னை கடற்கரையிலிருந்து எழும்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தியாகராயநகர் வழியாக தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரையில் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த ரயில் சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரைக்குச் செல்லும் மின்சார ரயில்கள் அடிக்கடி தாமதமாக வருவதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் நேரத்தில் இருந்து 5 முதல் 10 நிமிடம் தாமதமாக வருவதாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவ்வாறு ரயில்கள் தாமதமாவது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.  அடிக்கடி ரயில்கள் தாமதம் ஆவதால் அலுவலகம் மற்றும் பல்வேறு பணிகளுக்குச் செல்லக் கூடியவர்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  எனவே இதுபோன்ற குறைகளை சரி செய்ய ரயில்வே நிர்வாகத்திற்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.