புதுடெல்லி:

2019-ம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 208 சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன.


இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சொஸைட்டியின் ஆவணங்களில் இருந்து கிடைத்த தகவலின் விவரம்:

2019-ம் ஆண்டு முதல் 4 மாதங்களில் கிணறுகளில் விழுந்து இறந்தும், ரயில் மற்றும் பேருந்துகளில் அடிபட்டும், சுட்டுக் கொல்லப்பட்டும் 218 சிறுத்தைப் புலிகளை இந்தியா இழந்துள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் 500 சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன. கிணற்றில் விழுந்தோ, அடிபட்டோ அல்லது சுட்டுக் கொல்லப்பட்டோ தினமும் 1 சிறுத்தைப் புலி இறக்கிறது.

இந்தியா முழுவதும் சிறுத்தைப் புலிகள் வேகமாக அழிந்து வருகின்றன. புலிகளை விட சிறுத்தைப் புலிகள் வேகமாக இறப்பதாக நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரயில் மற்றும் பேருந்துகளில் அடிபட்டு சிறுத்தைப் புலிகள் இறப்பது படிப்படியாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மின் வயர்களில் சிக்கி சிறுத்தைப் புலிகள் இறப்பதும் அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அந்த ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.