தராபாத்

சாலை ஓரம் ஆதரவற்று இருந்த ஒரு மூதாட்டிக்கு ஐதராபாத் போக்குவரத்துத்துறை காவலர் ஒருவர் உணவு ஊட்டியது பலரின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

கோபால் என்பவர் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கூகட்பள்ளி காவல் நிலையத்தில் பணி புரிந்து வருகிறார்.  சமீபத்தில் தெலுங்கானா மாநில அமைச்ச்ர் நைனி நரசிம்ம ரெட்டி அங்கு வருகை புரிந்தார்.   போக்குவரத்துத் துறை காவலரான கோபால் அங்கு சாலைப் பணியில் இருந்தார்.   நேரு பல்கலைக் கழகம் அருகில் உள்ள சாலையில் அவர் போக்குவரத்தை சரி செய்துக் கொண்டிருந்தார்.

அந்த சாலை ஓரம்  சுமார் 90 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளார்.   பசியால் வாடிய அந்த மூதாட்டியைக் கண்டு இரக்கம் கொண்ட கோபால் உணவு வாங்கி தன் கையால் ஊட்டி விட்டுள்ளார்.   இதை சக காவல் அதிகாரியான ஹர்ஷா பார்கவி புகைப்படம் எடுத்துள்ளார்.

தனது டிவிட்டர் பக்கத்தில் ஹர்ஷா பார்கவி இந்த புகைப்படத்தை பதிவிட்டார்.   கோபாலின் இந்த மனிதாபிமான செயலுக்கு பாராட்டு மழை குவிந்து வருகிறது.   கோபால் உணவு ஊட்டிய அந்த மூதாட்டி தெலுங்கானா சிறை நிர்வாகத்ஹ்டின் கீழ் உள்ள ஆனந்த் ஆஸ்ரமம் என்னும் முதியோர் காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.