(பைல் படம்)

சென்னை,

ரும் 15ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஊழியர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதன் காரணமாக திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடைபெறும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போடப்படுவது வழக்கமாகும்.

12-வது ஊதிய ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்துவிட்ட நிலையில், 13-வது புதிய ஊதிய ஒப்பந்தத்துக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த மார்ச் 7-ந் தேதி சென்னை குரோம்பேட்டையில் உள்ள பணிமனையில் நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததை அடுத்து, ஏப்ரல் 28ஆம் தேதி 2-ம் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தை தள்ளிப்போனதை அடுத்து, மே 15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அனைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கத்தினர் அறிவித்தனர்.

இதை முன்னிட்டு நாளை வேலை நிறுத்த விளக்க கூட்டம் நடைபெறும் என்று அறிவித்திருந்தன தொழிற் சங்கங்கள்..

இந்நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  சென்னை பல்லவன் இல்லத்துக்குச் சென்று,  தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிகளிடம், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கான 500 கோடி ரூபாய் நிலுவைத்தொகை விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.‘

ஆனால், அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்த நிலுவைத்தொகை போதாது என்று கூறிய சி.ஐ.டி.யு தொழிற்சங்கத் தலைவர் சவுந்திரராஜன் கூறினார்

எனவே  திட்டமிட்டபடி மே 15ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.

இந்த வேலைநிறுத்தத்துக்கு ஆளுங்கட்சி தொழிற்சங்கமும் ஆதரவு அளிக்கும் என எதிர்பார்ப்பு நிலவுவதால், பஸ் ஸ்டிரைக் முழு அளவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.