பொங்கல் சிறப்பு பேருந்துகள் மூலம் அரசுக்கு ரூ.119 கோடி வருமானம்! தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தகவல்

Must read

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப்பட்ட  சிறப்பு பேருந்துகள் மூலம் அரசுக்கு ரூ.119 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துத் துறை தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்பவர்களின் வசதிக்காக தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கியது. இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அடுத்து தைப்பூசம் வந்ததால் மொத்தமாக ஆறு நாட்கள் விடுமுறை கிடைத்தால் ஏராளமானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.

இதையடுத்து ஜனவரி 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் ஊருக்கு செல்வதற்கும், பண்டிகை முடிந்து திரும்புவதற்கு 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் என மொத்தம் தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த பேருந்துகள் மூலம் எட்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பயணம் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.119 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

More articles

Latest article