சென்னை
நடத்துநர்கள் பேருந்துகளில் செல்போன் நிகழ்வுகளைப் பார்க்கப் போக்குவரத்துக் கழகம் தடை விதித்துள்ளது.
தமிழக போக்குவரத்து கழக பேருந்துகளில் நடத்துநர்கள் மீது பயணிகள் பல புகார்களைத் தெரிவித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவற்றில் நடத்துநர்கள் முன் இருக்கையில் அமர்ந்து கொண்டு செல்போன் நிகழ்வுகளை பார்ப்பதாக்வும் உறங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி தமிழக போக்குவரத்து கழகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது அதில் நடத்துனர் தங்கள் பணி நேரத்தின் போது செல்போன் நிகழ்வுகளைப் பார்க்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் முன் இருக்கையில் அமர்ந்து உறங்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தவிர நடத்துநர்கள் பேருந்துகளில் உள்ள 2 படிக்கட்டுகளையும் தங்கள் பார்வையில் இருக்கும்படி அமர்ந்து பயணம் முழுவதும் கண்காணிக்க வேண்டும் என போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது.