சென்னை: போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 1998ம் ஆண்டு முதல் பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டம் 01.04.2003 பின்பு கைவிடப்பட்டு, அந்த தேதிக்கு பின் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டமான CPS திட்டம் அமல்படுத்தப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் போக்குவரத்துக்கழக பணியாளர்கள், பழைய ஓய்வூதிய முறையே வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, திமுகவும், தனது  தேர்தல் அறிக்கையில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்” என அறிவித்திருந்தது.

அதையடுத்து, அதற்கானை நடைமுறைகளை தீவிரப்படுத்த போக்குவரத்துத் துறைக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இதையொட்டி,  பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர போக்குவரத்துத்துறை துணை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த திட்டம் மூலம் பயன்பெறும் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கான தொகையையும் உடனடியாக தெரிவிக்கவும், முன்மொழிவை அனுப்பி வைக்கவும் அனைத்து மாவட்ட போக்குவரத்துக்கழக  உத்தரவிடப்பட்டுள்ளது.