டெல்லி; நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகூர் வலியுறுத்தி உள்ளார்.

நமது நாட்டில், உயர்நீதிமன்றதுக்கும், உச்சநீதிமன்றத்துக்கும் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளை, உச்சநீதிமன்ற கொலிஜியம் தேர்வு செய்து, அதை மத்தியஅரசுக்கு பரிந்துரை செய்கிறது. இந்த பரிந்துரையை ஆய்வு செய்யும் மத்திய சட்டஅமைச்சகம், அதை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்புகிறது. அதைத்தொடர்ந்து குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி, உத்தரவை வெளியிடுகிறார்.

இந்த நீதிபதிகள் தேர்வில் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. ஏற்கனவே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து மிஸ்ரா, ரஞ்சன் கோகாய் போன்றோர் நியமனம் தொடர்பாகவும் சர்ச்சை எழுந்தது. ரஞ்சன் கோகாய்க்கு, மத்தியஅரசு ராஜ்யசபா எம்.பி. பதவி வழங்கியதும் சர்ச்சைக்குள்ளானது. இதற்கு, ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதிகள் குரியன் ஜோசப், மதன்லோக்கூர் போன்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில், நீதிபதிகள் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை தேவை என ஒய்வுபெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி  மதன்லோக்கூர் வலியுறுத்தி உள்ளார். நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் கூட்டத்தில் நீதிபதிகள் தேர்ந்தெடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படுபவை அனைத்தும் ஆவணங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும்,  ஓருவர் நீதிபதியாக எப்படி தேர்வு செய்யப்பட்டார்  என்பது போன்றவை நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

நீதிபதி லோகூர், ஏற்கனவே முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு ராஜ்யசா எம்.பி. பதவி வழங்கியதை கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். மத்தியஅரசின் இந்த நடவடிக்கை நீதித்துறையின் சுதந்திரம், பக்கச்சார்பற்ற தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை மறுவரையறை செய்துள்ளது “இந்த தருணம் மக்களின் நம்பிக்கை அசைந்திருக்கிறது என கூறியிருந்தார்.

அதுபோல தேசதுரோக வழக்குகள் பதிவு செய்யப்படவதையும் கடுமையாக விமர்சித்திருந்தார். சுதந்திரமான பேச்சுரிமையைக் கட்டுப்படுத்த அரசு இரும்புக் கரத்தைப் பயன்படுத்துகிறது. திடீரென்று மக்கள் மீது தேச துரோக வழக்குகள் போடும் வழக்குகள் அதிகம். எதையாவது பேசும் பொதுவான குடிமகன் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என தனது ஆதங்கத்தை ஆணித்தரமாக பதிந்தார்,

இவர் ஏற்கனவே ஜனவரி 2018-இல், அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் நடத்தை குறித்து செய்தியாளர்களை சந்திப்பை நடத்திய 4 நீதிபதிகளில் லோகூரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.