காங்கிரஸ் ஆட்சியில் ராணுவ கொள்முதலில் வெளிப்படைத்தன்மை…ஆதாரத்துடன் ராகுல் பதிலடி

Must read

டில்லி:

ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்ட விலைப் பட்டியலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் வெளியிட்டது கிடையாது என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காங்கிரஸ் ஆட்சியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ராணுவ தளவாட பொருட்கள் விலைப் பட்டியலை ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது தொடர்பான 3 பதில் உரை நகல்களை வெளியிட்டுள்ள அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி வெளிப்படை தன்மையை கடைபிடித்தது என்று தெரிவித்துள்ளார்.

இதன் பின்னராவது நாட்டின் ராணுவ அமைச்சர், ரபேல் விமான கொள்முதல் விலையை வெளியிடும் படி அருண்ஜெட்லி கூற வேண்டும் என்று ராகுல்காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

More articles

Latest article