ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் திருநங்கைகள் பங்கேற்பு

Must read

தூத்துக்குடி:

யிர்க்கொல்லி நோய்களை உருவாக்கி வரும்  ஸ்டெர்லைட் தாமிர ஆலையை நிரந்தரமாக மூடிக்கோடி தூத்துக்குடியில் பொதுமக்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 85வது நாளாக தொடர்ந்து வருகிறது.

இன்றைய போராட்டத்தில் திருநங்கைகளும் பங்கேற்று போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

கேன்சர், மூச்சுத்திணறல், சிறுநீரக பிரச்சினை  போன்ற பல்வேறு வகையான  உயிர்கொல்லி நோய்களை உருவாக்கி வரும், ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை 12 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், தூத்துக்குடி பனிமயமாதா கோவில் வளாகத்திலும் கடந்த 22 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில்  திருநங்கைகளும் பங்கேற்று தங்கள் ஆதரவை எதிர்த்தனர். மேலும், மக்களின் உயிர்களை கொல்லும் ஸ்டெர்லைட்  ஆலையை மூடாவிட்டால் தங்களை கருணைக் கொலை செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

More articles

Latest article