சென்னை
சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் ரயில்கள் நேரம் மாற்றம் செய்யபட்டுள்ளது.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாகப் போக்குவரத்தில் பல தடைகள் ஏற்பட்டுள்ளது, அதன அடிப்படையில் சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
* ரயில் எண் : 02639 – ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல்- இன்று இரவு 8.55 புறப்படும் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு நள்ளிரவு 12.30 மணிக்குப் புறப்படுகிறது.
* ரயில் எண்: 02615 -டெல்லி ஸ்பெஷல் – இன்று இரவு 6.50 புறப்படும் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 9.30 மணிக்கு புறப்படுகிறது.
* ரயில் எண் : 02671- மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ஸ்பெஷல் – இன்று இரவு 9.05 மணிக்குப் புறப்படும் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டு இரவு 10.15 மணிக்கு புறப்படுகிறது.