சென்னை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு நீர் வரத்து அதிகரிப்பால் 2000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்து வரும தொடர் கனமழையால் சென்னை நகருக்குக் குடிநீர் வழங்கும் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.   இதையொட்டி புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்த உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.  செம்பரம்பாக்கம் ஏரிக்குக் காலையில் 600 கன அடியாக  நீர் வரத்து இருந்தது.   அது தற்போது 1590 கன அடியாக  அதிகரித்துள்ளது.

இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது.  எனவே இன்று பிற்பகல் 1.30 மணி அளவில் வினாடிக்கு 500 கன அடி வீதம் உபரி நீர் திறந்து விடப்பட்டது.   அணையில் 5 கன மதகுகளில் 2 ஷட்டர்கள் மூலம் இந்த நீர் திறக்கப்பட்டது.  ஆனால் மேலும் மேலும் நீர் மட்டம் அதிகரிஹ்ட்து வருகிறது.

இதையொட்டி 3 மணிக்கு 4 ஆம் மதகில் இருந்து மேலும் 500 கன அடி நீர் திறக்கப்பட்டது.  தற்போது அணையில் இருந்து திறக்கப்படும் நீர் 1000 கன அடியில் இருந்து 2000 கன அடியாக உயர்த்தப்பட உள்ளது.   எனவே கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.