சென்னை: சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் சென்னை செட்ரலில் இருந்து அரசினர் தோட்டம் வழியே விமானநிலையம் (ஆலந்தூர்) வரை  செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.


சென்னை மெட்ரோ ரயில் சென்னை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் தினசரி லட்சகணக்கானோர் அதை பயன்படுத்தி வருகின்றனர். தினசரி  சுமார் 2 லட்சம் முதல் இரண்டரை லட்சம் பயணிகள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில்,  இன்று காலை,. சென்னை சென்ட்ரல் – விமானநிலையம் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.  ரெயில் சுரங்கப்பாதையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சிக்கியுள்ளது. சுரங்கப் பாதையில் ரயில் சிக்கியதால் அரசினர் தோட்டம் வழியே ஆலந்தூர் செல்லும் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.  அந்த வழித்தடத்தில்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும், இந்த வழியாக பயணிக்கும் பயணிகள் சென்ட்ரல் – கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் ஆலந்தூர் வரை மட்டுமே இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் காலையில் வேலைக்கு செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்தனர். மேலும், ஒரே வழியில் ஏராளமானோர் செல்ல முயன்றதால், ரயிலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.