விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள பாதூரில் தண்டவாளத்தில் சென்ற ஆடுகள் மீது எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதால் 65 ஆடுகள் அடிபட்டு இறந்தன.
பாதூரைச் சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன் முருகன். தாம் வளர்த்து வந்த செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, மாலை நேரத்தில் வீட்டுக்கு ஓட்டி வருவது வழக்கம். சம்பவத்தனறு அவர் ஆடுகளை ரெயில் தண்டவாளத்தில் ஓட்டி வரும்போது, மும்பையிலிருந்து நாகர்கோவில் செல்லும் விரைவு ரயில் ஆடுகள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 65 ஆடுகள் ஸ்பாட்டிலேயே இறந்தன.
தகவலறிந்த பாதூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் திருநாவலூர் போலீஸார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்று, இறந்த ஆடுகளைப் பார்வையிட்டு, விசாரணை நடத்தினர்.