திட்லாகர், ஒரிசா

பூரி – அகமதாபாத் ரெயில் எஞ்சின் இல்லாமல் பயணிகளுடன் 10 கிமீ தூரம் ஓடியது பதட்டத்தை உண்டாக்கியது

அகமதாபாத் – பூரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரிசா மாநிலத்தில் உள்ள திட்லாகர் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.   அங்கு சில பெட்டிகளை இணைப்பதற்காக எஞ்சின் கழற்றப்ப்பட்டது.   எஞ்சின் கழற்றப்பட்ட உடன் ரெயில் பெட்டிகள் பின்னோக்கிச் சென்றன.

இவ்வாறு கழற்றப்படும் முன்பு பெட்டிகளில் உள்ள பிரேக்குகள் பொருத்தப்பட வேண்டும்.   அவ்வாறு பொருத்தாததால் அந்த பெட்டிகள் பின்னோக்கி சென்றதால் ரெயில் நிலையத்தில் இருந்த மற்றும் ரெயிலினுள் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.   சுமார் 10 கிமீ தூரம் இவ்வாறு சென்ற பெட்டிகள் சிறிது சிறிதாக வேகம் குறைந்து தானாக நின்றது.

ரெயிலில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது..  மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

வேறு ஒரு மாற்று எஞ்சின் எடுத்து வரப்பட்டு இந்த ரெயில் எடுத்துச் செல்லப்பட்டு பின்பு பயணைத்தை தொடர்ந்துள்ளது.