சென்னை

சென்னை பேசின் பிரிட்ஜ் அருகே ஒரு ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது

Howrah, Feb 23 (ANI): 3 coaches of the Howrah-Amta local train derailed near the Maju railway halt, in Howrah on Thursday. (ANI Photo)

சென்னையில் பேசின்  பிரிட்ஜ் பகுதியில் ஒரு ரயில்வே பணிமனை உள்ளது.  அங்கு இன்று ஒரு ரயில் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டது.

ரயில் பேசின் பிரிட்ஜ் பணிமனைக்குச் செல்லும் போது ரயிலின் நான்கு சக்கரங்கள் தடம் புரண்டுள்ளது. இது பணிமனைக்கு சென்ற ரயில் என்பதால், ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய ரயில் பெட்டியைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த ரயில் விபத்தால் ரயில் போக்குவரத்தில் எந்த பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.