சென்னை,
ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழ்வதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. ரெயில், விமான சேவைகள் மாற்றி அமைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகிறது.
பனிப்பொழிவு காரணமாக சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கும் செல்லும் ஒருசில ரெயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து வரும் இணை ரெயில்கள் தாமதமாக வருவதால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது.
 
மற்ற நகரங்களில் இருந்து புறப்படும் ரெயில்களின் நேரமும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படு கிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூரில் இருந்து இன்று புறப்பட வேண்டிய ரெயில்கள் மாற்றப்பட்டுள்ள விவரம்:
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 7.15க்கு புறப்படவேண்டிய சென்ட்ரல்-டெல்லி சராய் ரோகிலா கிராண்ட் டிரங் எக்ஸ்பிரஸ் இரவு 10.30 மணிக்கு புறப்படும்.
சென்னை-மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து மாலை 5 மணிக்குப் பதில் 7.30க்கு புறப்படும்.
சென்ட்ரல்-சத்ய சாய் பிரசாந்தி நிலையம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11.30 மணிக்குப் பதில் 2 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1.30 மணிக்கு (31-12-2016) புறப்படும். 
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட வேண்டிய எழும்பூர் – மும்பை சிஎஸ்டி சிறப்பு ரெயில், 9 மணி நேரம் தாமதமாக நள்ளிரவு 1 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.