டில்லி

ர்செல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தர வேண்டிய தொகையை உடனடியக திருப்பி தர வேண்டுமென டிராய் அமைப்பு உத்தரவிடூள்ளது.

இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருந்த ஏர் செல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் சிறிது சிறிதாக குறையத் தொடங்கினர்.   இதனால் ஏர்செல் நிறுவனம் கடும் நஷ்டத்தை சந்தித்தது.    மேலும்  செல்பேசி கோபுரங்களுக்கான பராமரிப்புத் தொகையையும் தர முடியாத நிலை ஏற்பட்டதால் திவாலாகி விட்டதாக அறிவித்தது.

அந்த நிறுவனம் தர வேண்டிய பாக்கித் தொகை குறித்து டிராய் அமைப்புக்கு புகார்கள் வந்துள்ளன.  அதை ஒட்டி டிராய் அமைப்பு, “ஏர்செல் நிறுவனம் குறித்து எங்களுக்கு பல புகார்கள் வந்துள்ளன.   ஏர்செல்லின் பிரி பேய்ட் எண்களில் ஏற்கனவே செலுத்தப்பட்ட தொகை குறித்தும்  போஸ்ட் பேய்ட் எண்களின் காப்பீட்டு தொகை குறித்தும் ஏர்செல் ஏதும் தெரிவிக்கவில்லை என பெரும்பாலான புகார்களில் உள்ளது.

டிராய் அமைப்புக்கு தொலைபேசி வாடிக்கையாளர்களின் நலனை பாதுக்காகும் கடமை உள்ளது.   எனவே,கடந்த 2017ஆம் தேதி டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 2018 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம்தேதி வரையிலான வாடிக்கையாளர்கள் குறித்து அனைத்து தகவ்ல்களையும் எங்களுக்கு ஏர்செல் அளிக்க வேண்டும்.   தங்களிடம் இருந்து பிற நிறுவனங்களுக்கு மாறிய வாடிக்கையாளர்கள் குறித்த விவரங்களையும் அளிக்க வேண்டும்

பிரி பேய்ட் வாடிக்கையாளர்கள் உபயோகப் படுத்தாத தொகையையும் போஸ்ட் பேய்ட் வாடிக்கையாளர்கள் செலுத்திய காப்பிட்டு தொகையயும் அவர்களுக்கு உடனடியாக ஏர்செல் வழங்க வேண்டும்.    வேறு நிறுவனங்களுக்கு மாறியவர்களுக்கு அந்த புதிய நிறுவனம் மூலம் வழங்க வேண்டும்.   அத்துடன் செல்பேசி கோபுரங்களுக்கு தர வேண்டிய பாக்கித் தொகை எப்போது தரப்படும் என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்”  என உத்தரவு இட்டுள்ளது.