ஈரோடு: ஈரோடு அருகே தனியார் பள்ளிக்கு சென்ற 8ம்வகப்பு மாணவர் பள்ளி வேனில் இருந்து விழுந்ததில், மாணவன் மீது வேனின் பின்சக்கரம் ஏறி இறங்கயிது. இதனால், அந்த மாணவன் தலை நசுங்கி பலியானான். இந்த சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள குதிரைக்கல்மேடு என்ற பகுதியை சேர்ந்த மின் தொழிலாளியின் 8ம் வகுப்பு படிக்கும் திவாகர், அந்த பகுதியில் உள்ள பூதப்பாடியில் செயல்படும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்து வருகிறார். இவர் தினமும் பள்ளி வாகனத்தில் சென்று வரும் நிலையில், இன்று காலை வழக்கம்போல பள்ளிக்கு செல்ல 7.40 மணி அளவில் வீட்டில் இருந்து கிளம்பி அருகே உள்ள குதிரைக்கல்மேடு பகுதிக்கு சென்று வேனில் ஏறி பள்ளிக்கு சென்றார்.
பள்ளி வேன் அடுத்த ஊரான கோனேரிபட்டி சென்றுகொண்டிருந்தபோருது, அப்போது வேனின் முன்படிக்கட்டு வாசல் அருகே நின்று பயணித்து வந்த திவாகர், சாலையில் கடந்த பள்ளத்தைல், டிரைவர் வேனை திடீர் பிரேக் போட்டு திருப்பினார். அப்போது வேனுக்குள் இருந்த மாணவர் திவாகர் நிலைதடுமாறி முன்பக்க படிக்கட்டு வழியாக கீழே தவறி விழுந்தார். அப்போது அந்த வேனின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறி இறங்கி நசுக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே மாணவர் திவாகர் பலியானார்.
இதையடுத்து, வேன் நிறுத்தப்பட்டு, பெற்றோருக்கும், காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் இந்த விபத்து குறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, பலியான மாணவர் திவாகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் பள்ளி வேன் டிரைவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது