சேலம்: சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட 2 குழந்தைகளையும், காவிரி ஆற்றில் வீசி கொன்று தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இந்த சோக சம்பவம் சேலம் மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இது அதிர்ச்சியை ஏறப்டுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம், தாதகாப்பட்டியை சேர்ந்தவர் யுவராஜ் 42, இவரது மனைவி மான்விழி 35, இந்த தம்பதிக்கு நிதிஷா என்கின்ற நேகா 7, அஷரா 5 என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகளுக்கு சிறுவயது முதலே சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருவதுடன், இன்சுரின் ஊசியும் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிறுவயதிலேயே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளை எண்ணி, பெற்றோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளும் வழங்க முடியாத நிலையிலும் அவதிப்பட்டனர்.

இதனால் செய்வதறியாது திகைத்த பெற்றோர், குந்தைகளுக்கு தேவையான சிகிச்சை வழங்க முடியாது என்பதாலும், குழந்தைகள் சிறுவயதிலேயே அவதிப்படுத்தை எண்ணி கண்ணீர் விட்டதுடன், இதற்கு முடிவு கட்ட எண்ணி இருவரும் யோசித்து, தற்கொலை முடிவை எடுத்துள்ளனர். அதன்படி  இரு மகள்களை கொன்றுவிட்டு தாங்களும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வதாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு யுவராஜ் மற்றும் அவரது மனைவி மான்விழி, அவரின் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மேட்டூர் அருகே கொளத்தூர், கர்நாடக தமிழக எல்லையில் உள்ள சின்ன காவல் மாரியம்மன் காவிரி ஆற்றின் நீர்தேக்க பகுதிக்கு சென்றுள்ளனர்.

அங்கு மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்த இரு பெண் குழந்தைகளையும், பெற்றோர்கள்,  காவிரி ஆற்றில் தூக்கி  வீசியுள்ளார். இதில் அவர்கள் தண்ணீரில் கதறியபடியே மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதன் பின்னர் யுவராஜ் மற்றும் மான்விழி இருவரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.