சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

100 அடி சாலையில் கோயம்பேடு முதல் அசோக் நகர் வரையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன.

இன்று பகலிலும் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருவதையடுத்து சாலைகளில் பள்ளமான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் சாலை ஓரங்களில் செல்வதை தவிர்ப்பதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணமாக உள்ளது.

அதேபோல் கொரட்டூர் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கல்லூரி பேருந்துகள் மற்றும் அலுவலகம் சென்றவர்களின் வாகனங்கள் மாலையில் மேலும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

[youtube-feed feed=1]