சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  தலைமை யில் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல் அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் காணொலி காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச் செயலாளர், துறை சார் செயலாளர்கள், அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோரும் பங்கேற்பு அனைத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி மழை கொட்டி வருகிறது. இன்று முதல் மழையின் தீவிரம் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முதல் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், அவற்றை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் கனமழையால் சென்னையில் இருவர் உயிரிழந்தனர்.

மேலும்,  தொடர் கன மழை பெய்து வருவதால் தமிழ்நாட்டில் இன்று சென்னை  8 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.